Keyman for Malayalam Typing

அம்மா! அகிலாண்டேஸ்வரி!!


ஸ்ரீசக்ரராஜ
சிம்ஹாசனேஸ்வரி!
ஸ்ரீலலிதாம்பிகையே!
புவனேஸ்வரி!
ஆகம வேத கலா மாயா ரூபினி!
அகில சராசர ஜனனி நாராயணி!
நாக கங்கண நடராஜ மனோஹரி!
ஞானவித்யேஸ்வரி! ராஜராஜேஸ்வரி!

பலவிதமாய் உன்னைப்
பாடவும் ஆடவும்
பாடிக் கொண்டாடும்
அன்பர் பதமலர் சூடவும்
உலகம் முழுதும்
என தகமுறக் காணவும்
ஒரு நிலை தருவாய்!
காஞ்சி காமேஸ்வரி!!

உழன்று திரிந்த என்னை
உத்தமனாக்கி வைத்தாய்!
உயரிய பெரியோருடன்
ஒன்றிடக் கூட்டி வைத்தாய்!
நிழலெனத் தொடர்ந்த முன்னூழ்
கொடுமையை நீங்க செய்தாய்!
நித்யகல்யாணி!
பவானி! பத்மேஸ்வரி!!

துன்பப் புடத்திலிட்டு என்னை
தூயவனாக்கி வைத்தாய்!
தொடர்ந்த முன்மாயம் நீக்கிப்
பிறந்த பயனைத் தந்தாய்!
அன்பைப் புகட்டி உந்தன்
ஆடலைக் காண செய்தாய்!
அடைக்கலம் நீயே!
அம்மா! அகிலாண்டேஸ்வரி!!

அகத்தியர்

അഭിപ്രായങ്ങളൊന്നുമില്ല: