Keyman for Malayalam Typing

Navagraha sthOthram in Tamil

நவக்கிரக ஸ்தோத்திரம்

1. சூரிய பகவான்

சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்திராபோற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்

2. சந்திர பகவான்

எங்கள் குறைகளெல்லாம் தீர்க்கும்
தீங்களே போற்றி திருவருள் தருவாய்
சந்திரா போற்றி சற்குரு போற்றி 
சங்கடந் தீர்ப்பய் சதுரா போற்றி

3. செவ்வாய் பகவான்

சிறப்புறு மனியே செவ்வாய்த் தேவே
குறைவிலா தருள்ப்பாய் குணமுடன் வாழ
மங்களச் செவ்வாய் மலரடி போற்றி 
அங்காரகாரகனே அவதிகள் நீக்கு

4. புத பகவான்

இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
பதத் தந்தருள்வாய் பண்ணொளியானே
உதவியெ யருளும் உத்தமா போற்றி

5. குரு பகவான்

குணமிகு வியாழக் குரு பகவானே
மணமுள வாழ்வு மகிழ்வுடனருள்வாய்
பிரகஸ்பதி வியாழ பரகுரு நேசா
க்ரகதோஷமின்றி கடாக்ஷ்த் தருள்வாய்

6. சுக்கிர பகவான்

சுக்கிர மூர்த்தி சுபமிக யீவாய்
வக்கிரமின்றி வரமிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே

7. சனி பகவான்

நங்கடம் தீர்க்கும் சனி பகவானே 
ம்ங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச்செகம் வாழ இன்னருள் தா! தா!

8. ராகு பகவான்

அரவெனும் ராகு அய்யனே போற்றி
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆகவருள்புரி அனைத்திலும் வெற்றி
ராகு கன்னியே ரம்யா போற்றி

9. கேது பகவான்

மெது தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி பாவம் தீர்ப்பாய்
வாதம், வம்ப், வழக்குகளின்றி
மெது தேவே கேண்மையாய் ரக்ஷி

******



അഭിപ്രായങ്ങളൊന്നുമില്ല: