கழு என்றொரு கோரை
புல் வகை உண்டு அந்த வகை கோரை புல்லை கொண்டு பாய் பின்னும் போது கற்பூர வாசனையை
உணர முடியும். கழு கோரைப் புல்லினால் பாயின் அருகில் தேள், பூரன் உள்ளிட்ட விச பூச்சிகள் நெருங்காது. மேலும் கழு கோரை
புல்லினால் பின்ன பட்ட பாய்களில் படுத்து உறங்கினால் இயற்கையாகவே அதனுடைய மனமான
கற்பூர வாசனையை நமது நாசிகள் உணரும். அதன் மருத்துவ குணங்கள் உடல் நலனை காக்கும் .
இப்படியாக "கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை ?" என்ற சொலவடை மறுவி கழுதைக்கு
தெரியுமா கற்பூர வாசனை என்றானது. இனி பழமொழியை சரியாக சொல்வோமா.?
അഭിപ്രായങ്ങളൊന്നുമില്ല:
ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ