Keyman for Malayalam Typing

അർദ്ധനാരീശ്വര സ്തോത്രം


ചമ്പേയ ഗൗരാർദ്ധശരീരകായൈ
കർപ്പൂര ഗൗരാർദ്ധശരീരകായ,
ധമ്മില്ലകായൈ ച ജടാധരായ
നമഃശ്ശിവായൈ ച നമശ്ശിവായഃ  1

കസ്തൂരികാകുങ്കുമചർച്ചിതായൈ
ചിതരാജപുഞ്ചവിചർച്ചിതായ,
കൃതാസ്മരായൈ വികൃതസ്മരായ
നമഃശ്ശിവായൈ ച നമശ്ശിവായഃ  2

ഝണത്ക്വണത്കങ്കണ നൂപുരായൈ
പാദബ്ജരാജത് ണിനൂപുരായൈ,
കൃതസ്മരായൈ വികൃതസ്മരായ
നമഃശ്ശിവായൈ ച നമശ്ശിവായഃ  3

വിശാലനീലോത്പലലോചനായൈ
വികാസിപങ്കേരുഹലോചനായ,
സമേക്ഷണായൈ വിഷമേക്ഷണായ
നമഃശ്ശിവായൈ ച നമശ്ശിവായഃ  4

മന്ദാരമാലാകലിതാലകായൈ
കപാലമാലാങ്കിതകന്ധരായ,
ദിവ്വ്യാംബരായൈ ച ദിഗംബരായ
നമഃശ്ശിവായൈ ച നമശ്ശിവായഃ  5

അംഭോധരശ്യാമള കുന്തളായൈ
തഡിത്പ്രഭാ താമ്രജടാധരായ,
നിരീശ്വരായൈ നിഖിലേശ്വരായ
നമഃശ്ശിവായൈ ച നമശ്ശിവായഃ  6

പ്രപഞ്ചസൃഷ്ട്യുന്മുഖലാസ്യകായൈ
സമസ്തസംഹാരകതാണ്ഡവായ,
ജഗജ്ജനന്യൈ ജഗദേകപിത്രൈ
നമഃശ്ശിവായൈ ച നമശ്ശിവായഃ   7

പ്രദീപ്തരത്നോജ്വല കുണ്ഡലായൈ
സ്രന്മഹാപന്നഗ ഭൂഷണായ,
ശിവാന്വിതായൈ ച ശിവാന്വിതായ
നമഃശ്ശിവായൈ ച നമശ്ശിവായഃ   8

ഫലശ്രുതിഃ
യേതപ്തഠേ ദഷ്ഠകമിഷ്ടദം യോ
ഭക്ത്യാ സമാന്യോ ഭുവി ദീർധജീവി,
പ്രാപ്നോതി സൗഭാഗ്യമനന്തകാലം
ഭൂയാത്സദാ തസ്യ സമസ്തസിദ്ധിഃ

( = Thus concludes the ardhanArIshvara stotram, composed by
Sri Adi Sankaracharya, disciple of Sri Govinda BhagavatpAda.)

ജുഗ് സഹസ്ത്ര ജോജൻ പർ ഭാനു!


Kindly Note:
The picture you see here in 2 or 3 posts are not from India. Heard West Indies? We play cricket match with them. One of the island there is Tobago. Indians reached there long ago. It is they who built this temple and hanuman idol.

കൃത, ത്രേത, ദ്വാപര, കലി  എന്നിവയാണു ചതുർയുഗങ്ങൾ. കലിയുഗത്തിന്റെ നല്ലൊരു ഭാഗം നമ്മൾ താണ്ടിക്കഴിഞ്ഞു. ഒരു യുഗം 12000 ആണ്ടുകളാണെന്ന് പറയപ്പെടുന്നു. അങ്ങിനെയാണെങ്കിൽ ചില കണക്ക് കൂട്ടലുകളുടെ സഹായത്തോടെ ചില അതിശയങ്ങളായ വിവരങ്ങൾ പുരാണ സ്തോത്രങ്ങളിലും പ്രാർത്ഥനകളിലും ഒളിഞ്ഞ് കിടക്കുന്നതായി കാണാം! ഒരു ഉദാഹരണം താഴെ കൊടുക്കാം.

जुग सहस्त्र जोजन पर भानु , 
लील्यो ताहि मधुर फल जानू||18||

"ജുഗ് സഹസ്ത്ര ജോജൻ പർ ഭാനു,
ലില്യോ താഹി മധുർ ഫൽ ജാനൂ"

മേലുദ്ധരിച്ചിട്ടുള്ള ഈരടി തുളസീദാസ് രചിച്ച "ഹനുമാൻ ചാലിസ" യിലെ 18 മത്തെ ശ്ലോകമാണ്. ഇതിന്റെ സാരം പ്രദമ ദൃഷ്ട്യാ ഇങ്ങനെയാണ്, ശിശുവായിരുന്ന വായു പുത്രൻ ഹനുമാൻ, ഉദിച്ചുയർന്ന സൂര്യനെ കണ്ട് അത് ഏതോ വിശേഷമുള്ള പഴമാണെന്ന് ധരിച്ച്  അങ്ങോട്ട് ചാടി. ഈ വരികൾ അൽപം ആഴത്തിൽ വ്യാഖ്യാനിക്കുകയാണെങ്കിൽ ഭൂമിക്കും സൂര്യനും ഇടയിലുള്ള അകലം കണ്ടു പിടിക്കാം!

യുഗ സഹസ്ര യോജന ( ജുഗ് സഹസ്ത്ര ജോജൻ ) എന്ന് കേൾക്കുമ്പോൾ തന്നെ നമ്മുക്ക് അറിയാം അത് ദൂരത്തെ സൂചിപ്പിക്കുന്നതാണെന്ന്. ഭാനുവിലേക്ക് എത്ര ദൂരമുണ്ടെന്ന് കബീർദ്ദാസിന്റെ രചനയിലൂടെഃ-

1 യുഗം  = 12000 കൊല്ലം 
1 സഹസ്രം  = 1000
1 യോജന  =  ഏകദേശം 8 മൈൽ ദൂരം 

യുഗം x സഹസ്രം  x യോജന  = ദൂരം സൂര്യൻ
12000 x 1000 x 8 miles = 9,60,00,000 miles

1 mile = ~ 1.6kms

96000000 x 1.6 = 1,536,000,000 കിലോ-മീറ്റർ
 
ഗൂഗിളിൽ തേടിയാൽ കിട്ടുന്നത് 1,496,000,000 കിലോ-മീറ്റർ ദൂരമുണ്ടെന്നാണ് . ഏകദേശം ശരിയായി ത്തന്നെ വരുന്നുണ്ട്.   ഇതിൽ നിന്ന് എത്ര ദൂരത്താണ് ആ പഴം എന്ന്  വായു പുത്രനായ ഹനുമാന്  അനുമാനിക്കൻ പ്രയാസമുണ്ടായിരുന്നില്ല എന്നാണ്  വ്യംഗ്യം ! ചാടിയപ്പോൾ എന്തു സംഭവിച്ചു എന്നത്  പ്രസിദ്ധമാണല്ലോ.

Temple Pond


Sacred Pond of Akliyath Temple located in the northwest corner outside the chutambalam is in the picture. It was renovated in 2004.

On the last day of the Vishu vilakk festival aaraat is performed for the presiding diety. Aaraat means divine bath. The main deity is brought to the pond by the chief priest. There is a platform at the water level prevailing in the pond then specially constructed for the purpose conducting the traditional poojas for the idol. After poojas the priest carrying the idol steps down from the platform and stand in neck deep of water. Immersing himself three times in the pond with the idol held securely in his hands he takes back to the sanctum sanctorum. Then the divine flag of the Lord is downed from dwajasthampam indicating the end of the festivities

எதற்காக இப்படி ஓடுகிறோம் ?


பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை கொண்டிருக்கும்பயம் பெற்றோர்கள் "கண்டிப்பாக" படித்து அதன்பின்பு  தங்கள் குழந்தைகளுக்கும் சொல்லுங்கள்.

சிறுநீர், மலம் கழிக்க உரிய நேரம் தராமல் குழந்தைகளை நோயாளிகள் ஆக்குகின்றன பள்ளிகள்.

நம் எல்லோருக்குமே வாரிசு நலன் முக்கியமானதாக இருக்கிறது. எல்லோருடைய உயர்ந்தபட்ச ஆசை, கனவு, நோக்கம், லட்சியம் எல்லாவற்றிலும் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் உட்கார்ந்திருக்கிறது. இதற்காக எந்த விலை கொடுக்கவும் தயாராகவும் இருக்கிறோம். குழந்தைகளின் எதிர்காலத்துக்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிந்திக்கிறோம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு கஷ்டப்படுகிறோம். ஆனால், அடிப்படையான அம்சங்களில் கோட்டை விடுகிறோம்.


சென்னையிலுள்ள பிரபலமான ஒரு மருத்துவமனைக்குச் சமீபத்தில் சென்றிருந்தேன்.

அங்குள்ள ரத்தச் சுத்திகரிப்புச் சிகிச்சை மையம் (டயாலிஸிஸ் சென்டர்) பக்கம் சென்றபோது, நான் பார்த்த காட்சி அதிரவைத்தது.

அந்த மையத்தில் சுத்திகரிப்பு செய்து கொண்டிருந்தவர்களில் கணிசமானவர்கள் குழந்தைகள்.

பள்ளி செல்லும் வயதுடையவர்கள். பின்னர், மருத்துவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.

நிலைகுலைய வைத்த சூழல் நவீன வாழ்க்கைச் சூழல், உணவுக் கலாச்சாரம் என்று சிறுநீரகச் செயலிழப்புக்கான  காரணங்களைப் பட்டியலிட்டவர், குழந்தைகள் பாதிக்கப் படுவதற்கான காரணங்களில்  ஒன்றாக நம்முடைய பள்ளிகளில் உள்ள கழிப்பறைச் சூழலைக் குறிப்பிட்டார்.

“குழந்தைகள் கேட்கும் உணவு வகைகளையெல்லாம் வாங்கித் தரும் பெற்றோர், அவர்கள் உண்ணும் உணவும் பானங்களும் கழிவாக வெளியேறுவதில் எந்த அளவுக்கு அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள்?” என்று கேட்டபோது கூட இந்தப் பிரச்சினையின் முழு உக்கிரத்தை நான் உணரவில்லை.


பின் இதுபற்றி சிறு பிள்ளைகள் பலரிடமும் பேசினேன். பள்ளிச் சூழலை அவர்கள் சொன்ன விதம், ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரான என்னையே நிலை குலையச் செய்தது.


பல பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் சிறுநீர், மலத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளப் பழகியிருக்கிறார்கள். *ஆசிரியர்களுக்குப் பயந்து, வெட்கப்பட்டு, நடுங்கி*

ஒரு நாள் சாப்பிடாமல் இருந்தால் உடலுக்கு நல்லது. ஒரு வாரம் கூட உண்ணாவிரதம் இருக்கலாம். உடல் அதை ஏற்றுக் கொள்கிறது.


ஆனால், ஒரு மணி நேரம் சிறுநீர் / மலம் கழிப்பதைத் தள்ளிப் போடுவது கூட நல்லதல்ல. அன்றாடம் இதை மணிக்கணக்கில் செய்யும்போது உடல் சித்ரவதைக்கு உள்ளாகிறது.

உடல் உறுப்புகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினை
எனக்குத் தெரிந்து, காலையில் ஏழு மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பும் மழலைகள் இருக்கிறார்கள். அவர்கள் கே.ஜி. வகுப்புகள் படிக்கிற பள்ளிக் கூடங்களுக்கு ஐந்து, பத்து கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்களில் செல்ல வேண்டும்.

அந்தப் பள்ளி வாகனங்கள், வழியில் உள்ள ஏனைய கிராமங்களுக்கும் சென்று குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு பள்ளிக்குச் செல்லும். பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் பதற்றத்துடன் வீட்டிலிருந்து ஓடிவந்து வாகனங்களில் ஏறும் குழந்தைகள் பள்ளிக்கு வந்தவுடனேயே சிறுநீர் கழிக்க, மலம் கழிக்க என்று கழிப்பறைக்கு ஓட முடியுமா?


ஆசிரியர்கள் அனுமதிப்பார்களா?

இது அன்றாடம் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினை.

ஆனால், அன்றாடம் இப்படிக் கழிப்பறைக்கு ஒரு குழந்தை அனுமதி கேட்டால், அதை நொறுக்கியே விடுவார்கள் ஆசிரியர்கள்.

வளர்ந்த பிள்ளைகளே கூட கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று கேட்கத் தயங்கும் சூழலே பள்ளியில் இருக்கிறது.

அப்படிக் கேட்பதைக் கேலிக்குரியதாக, ஏளனத்துக்கு உரியதாகவே நாம் கட்டமைத்து வைத்திருக்கிறோம்.

உயர் வகுப்பு படிக்கிற பிள்ளைகளுக்கே இந்த நிலை என்றால், கே.ஜி. படிக்கிற சிறு குழந்தைகளின் நிலை என்ன?


பயமின்றிச் சொல்ல முடியுமா?

ஆசிரியர் என்ற சொல்லும், ஆசிரியர் என்ற பிம்பமும் சாதாரணமானதா அல்லது எளிதில் அணுகக் கூடிய சினேகம் மிக்கதா?


ஒரு நாளில் வகுப்பறையில் ஆசிரியர்கள் அதிகமாகப் பயன்படுத்தக் கூடிய வார்த்தை

 ‘ *பேசாத*!’ என்பதுதான்.

அதற்கடுத்த சொல் ‘ *வாய மூடு*!’ என்பது.


‘எனக்குச் சிறுநீர், மலம் வருகிறது’ என்று எத்தனை பிள்ளைகளால் பயமின்றிச் சொல்ல முடியும்?


தவறி வகுப்பறையிலேயே சிறுநீர் கழித்து விடுகிற குழந்தைகள் எப்படியான கேலிக்கும் அவமதிப்புக்கும் ஆளாகிறார்கள் என்பதை ஏனைய குழந்தைகள் பார்த்துக் கொண்டேதானே வளருகிறார்கள்!


யோசித்துப் பார்த்தால், நம்முடைய ஒட்டுமொத்தக் கல்வி அமைப்புக்குமே இதுகுறித்து இன்னும் பிரக்ஞை வரவில்லை என்ற முடிவை நோக்கித்தான் நகர வேண்டியிருக்கிறது. நம்மூரில் எத்தனை பள்ளிகளில் போதுமான அளவுக்குக் கழிப்பறைகள் இருக்கின்றன?


இரண்டாயிரம் பேர் படிக்கிற பள்ளிக்கூடத்தில் இடைவேளையின் போது ஐந்து, பத்து நிமிடங்களுக்குள் அத்தனை பிள்ளைகளும் கழிப்பறையைப் பயன்படுத்திவிட முடியுமா?

அந்த அளவுக்கு வசதி கொண்ட பள்ளி என்று தமிழ்நாட்டில் எத்தனை பள்ளிகளைக் காட்ட முடியும்?


*கூட்டத்தில், வரிசையில் நின்று சிறுநீர் கழிக்க, மலம் கழிக்கக் கூச்சப்படுகிற குழந்தைகள் உண்டு*.


கூட்டமாக இருக்கிறது, வரிசையில் நிற்க வேண்டும் என்பதற்காகவே சிறுநீர் கழிக்காமல் திரும்பி வந்து விடுகிற பிள்ளைகள் உண்டு.

*சிறுநீர் கழிப்பதற்காக, மலம் கழிப்பதற்காகக் காத்திருந்த நேரத்தில் மணி அடித்துவிட்டது, நேரமாகிவிட்டது ‘மிஸ் திட்டுவார்கள்’ என்று கழிவை வெளியேற்றாமல், அடக்கிக்கொண்டு அப்படியே ஓடிவந்து விடுகிற பிள்ளைகளும் உண்டு*.


குழந்தைகள் பள்ளி செல்லும் காலத்தில் மதிப்பெண்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் வேறு எதற்கும் கொடுப்பதில்லை.


அரை லிட்டர் போதாது
பள்ளிக்குச் செல்கிற குழந்தைகளில் அநேகம் பேர் அரை லிட்டர் தண்ணீருக்கு மேல் எடுத்துச் செல்வதில்லை. ஒரு பகல் முழுவதும் ஒரு குழந்தைக்கு அரை லிட்டர் தண்ணீர் போதாது. ஆனாலும், ஏன் கொஞ்சம் தண்ணீரையே எடுத்துச் செல்கிறார்கள்? *காரணம் இதுதான்*.

காலை ஏழு மணிக்கு வீட்டைவிட்டுச் செல்கிற பல குழந்தைகள், பள்ளியிலிருந்து திரும்பி வீட்டுக்கு வந்தவுடனேயே கழிப்பறைக்கு ஓடுவதைப் பார்க்கலாம்.


இது ஒரு சமூகம் நிகழ்த்தும் வன்முறையின் குறியீடுகளில் ஒன்று. ஒருபுறம், கழிவுகளை உரிய நேரத்தில் வெளியேற்றாததால், இன்னொருபுறம் தேவையான நேரத்தில் தண்ணீர் குடிக்காததால் உடல் பாதிப்புக் குள்ளாகிறது.

இதனால், பல நோய்களுக்குக் குழந்தைகள் ஆளாகின்றனர்.

இப்படித்தான் சிறுநீரகப் பாதிப்புக்கும் உள்ளாகிறார்கள் என்பதை மருத்துவர் என்னிடம் விளக்கினார்.

“மூன்று வயதிலேயே பள்ளிக்கு அனுப்பி விடுகிறார்கள். சிறுநீரை அடக்கி அடக்கி வைப்பதால், சிறுநீர் வெளியேற வேண்டிய பாதையில் கழிவுகள் அடைப்புகளாக மாறி, நெஃப்ரான்களைச் செயலிழக்க வைத்து, சிறுநீரகத்தைச் சுருங்க வைக்கின்றன. சிறுநீரகம் செயல்படாததால் செயற்கை முறையில் டயாலிசிஸ் மேற்கொள்ள வேண்டிய நிலை.

சிறுநீரகம் செயலிழந்தால், மாற்று சிறுநீரக அறுவைச் சிகிச்சை, டயாலிசிஸ் சிகிச்சை இரண்டுதான் தற்போதிருக்கும் வழிகள்.

இவை இரண்டுமே முழு ஆயுள் உத்தரவாதம் இல்லாதவை.

"எதற்காக ஓடுகிறோம் என்பதையே உணராமல் ஓடிக்கொண்டிருக்கும் தலைமுறை நம்முடையது” 

என்றார் மருத்துவர்.
ஆமாம், எதற்காக இப்படி ஓடுகிறோம்?

Courtesy Note:- தி இந்து நாளிதழில் வந்த மிகச் சிறந்த கட்டுரை.